
செல்லப்பிராணிகள் வளர்க்க உரிமம் கட்டாயம்
ஈரோடு மாநகராட்சி பகுதி வீடுகளில் வளர்க்கப்படும் செல்லப்பிராணிகளுக்கு உரிமையாளர்கள் ரூ.250 கட்டணம் செலுத்தி உரிமம் பெற வேண்டும். இதற்கு கடைசி தேதி டிசம்பர் (31.12.2024)ஆகும். உரிமம் பெற தவறினால் ரூ.5,000 முதல் ரூ.50,000 வரை அபராதம் விதிக்கப்படும். மேலும் உரிமம் இல்லாமலோ அல்லது வெளியில் சுற்றி திரிந்தாலோ செல்லப்பிராணிகள் அறிவிப்பு இல்லாமல் பிடித்து செல்லப்படும் என மாநகராட்சி சார்பில் அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.